Things You Should Sort Out Before You Settle Down ...


ஒவ்வொருவரும் செட்டில் ஆகும் முன்னர் செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள்!

வாழ்க்கை ஓர் வட்டம் என்பார்கள், சதுரம் என்பார்கள் எதையும் நம்பிவிடாதீர்கள். உங்களது ஒவ்வொரு நாளும் ஓர் புதிய சவால். அதை உங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப் படுகிறது. அதை பயன்படுத்தி முன்னேறுவதும், உதாசீனப்படுத்தி பாதாளத்தில் விழுவதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

செட்டில் ஆவது தான் வாழ்க்கை என்று கூறிவிட முடியாது. செட்டிலான பிறகும் கூட தவறுகள் நடக்கலாம், தோல்விகள் ஏற்படலாம். ஆனால், செட்டில் ஆவதற்கு முன்பு உங்களிடம் இருக்கும் இளமையை நீங்கள் பாழாக்கிவிடக் கூடாது. அந்த வரபிரசாதம் மீண்டும் கிடைக்காது. எனவே, நீங்கள் செட்டில் ஆகும் முன்னர் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களை தவறாமல் செய்துவிடுங்கள்....

உங்களை நீங்களே விரும்ப வேண்டும்
மனோதத்துவ நிபுணர்கள், "யார் ஒருவர் தன்னை தானே விரும்புகிறார்களோ, அவர்கள் தான் அவர்களது லட்சியங்களை எளிதில் அடைகிறார்கள்" என்று கூறுகிறார்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களை நீங்களே விரும்ப தொடங்க வேண்டும்.

நல்ல நண்பர்கள் 

நீங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன்பு, உங்களுக்கான நல்ல நண்பர் ஒருவரையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செட்டில் ஆன பிறகு பணம் நிறைய சேரும், ஆனால் உங்களுக்கான உண்மையான நண்பர் கிடைப்பது மிகவும் அரிதி.

பரிசோதனை முயற்சிகள்

செட்டில் ஆன பிறகு நீங்கள் பரிசோதனை முயற்சிகளில் இறங்குவது கொஞ்சம் கடினம். திருமணமான பிறகு நீங்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம், மற்றும் உங்களை நம்பி ஓர் குடும்பம் என்று அமையும் போது பரிசோதனை முயற்சிகளில் இறங்க முடியாது. எனவே, செட்டில் ஆவதற்கு முன்பே புதிய மக்களை சந்திப்பது, புதிய விஷயங்களை சிந்திப்பது என உங்கள் வாழ்க்கை மேம்பட பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

பழையதில் இருந்து மீண்டு வாருங்கள் 

பழையதையே நினைத்துக் கொண்டு இருப்பது உங்கள் எதிர்காலத்தை வீணாக்கிவிடும். அது தொழில் ரீதியான தோல்வியாக இருந்தாலும் சரி உறவு ரீதியான தோல்வியாக இருந்தாலும் சரி. நேற்றைய நாளின் தாக்கம் இன்றைய தினத்தில் தொடரும் போது அது உங்களது நாளைய தினத்தை கண்டிப்பாக பாதிக்கும்.

கணக்கை முடித்து விடுங்கள் 

எக்காரணம் கொண்டும் நேற்றைய தினத்தை பாக்கி வைக்க வேண்டாம். சண்டை, சச்சரவு காரணமாக அப்படியே விட்டு விலகுவதை விட, முழுமையாக விட்டு விலகுவது தான் சரியான தீர்வு. எனவே, எதுவாக இருந்தாலும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவெடுத்துவிடுங்கள்.

கிறுக்குத்தனம் 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அனைத்தையும் செய்துவிடுங்கள். செட்டில் ஆன பிறகு வரும் பொறுப்பு உங்களை கொஞ்சம் மேம்பட்ட மனிதராக மாற்றிவிடும். அந்த நேரத்தில் பல சமயங்களில் உங்களுக்கு பிடித்த செயல்களை கூட வெளிப்படையாக செய்ய வாய்ப்பிருக்காது. எனவே, முன்னரே உங்களுக்கு பிடித்த செயல்கள் அனைத்தையும் செய்துவிடுங்கள்.

சுதந்திரம் 

சுதந்திரமாக சுற்றுங்கள். செட்டிலான பிறகு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும். ஆனால், சுதந்திரமாக சுற்றி திரிய முடியாது. உங்கள் உணர்வை முழுவதுமாக கொட்டித் தீர்க்கும் வகையில் ஓர் நல்ல பயணத்தை மேற்கொள்ளுங்கள்.